கொழும்பில் ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் பொதுச்சபை வரவேற்பு நிகழ்வு!

பொய்யான தகவல்களைக் கட்டுப்படுத்துவதிலும், பொதுமக்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், சமூகங்களிடையே அமைதியையும் புரிதலையும் ஏற்படுத்துவதிலும் பொறுப்புள்ள ஊடகவியல் முக்கிய பங்கு வகிப்பதாக வெளி விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ‘சின்னமன் லைஃப்’ (Cinnamon Life) வளாகத்தில் இன்று (01) நடைபெற்ற ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63-வது பொதுச்சபை வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் தகவல்களை எளிதில் பெற முடிவதோடு, உண்மை எது பொய் எது என்பதை வேறுபடுத்தி அறிவது சவாலாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், துல்லியமான தகவல்களை மக்களுக்கு வழங்கி நற்புரிதலை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஊடக நிறுவனங்களுக்கு உண்டு என வலியுறுத்தினார்.

இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைக் குறிப்பிட்ட அவர்: வெவ்வேறு சமூகங்களிடையே கலந்துரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்றார். மேலும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மனிதகுலத்திற்குப் பயன்படும் வகையிலும், அறிவை அனைவரும் எளிதில் பெறக்கூடிய வகையிலும் அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இராஜதந்திர நடவடிக்கைகளால் மட்டும் அமைதியை நிலைநாட்டிவிட முடியாது” எனத் தெரிவித்த அமைச்சர், மக்களுக்கிடையிலான புரிதல் மிக முக்கியமானது என்றும், பொறுப்பான ஊடக ஒலிபரப்பு சமூகங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.”

அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஊடகம்: உண்மை, நம்பிக்கை மற்றும் மாற்றம்” எனும் கருப்பொருளில் 5 நாட்கள் நடைபெறும் இம்மாநாடு ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை நடைபெறுகின்றது. ‘எம்.டி.வி இலங்கை’ நிறுவனம் நடத்தும் இம்மாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

IMG_1052

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

November 2, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன்

IMG_1051

’எரிவாயுவை பதுக்க வேண்டாம்’!

November 2, 2026

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல்

IMG_1049

காலநிலை முன் அறிவிப்பு!

November 2, 2026

நாட்டின்; பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியகூறுகள்

IMG_1048

பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் கூட்டங்கள் ஆரம்பம்!

November 2, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் தோறும் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் செயற்பாட்டுப்

IMG_1047

சீன அரசின் உதவியுடன் 9 பாலங்கள்

November 2, 2026

சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையின் 9 மாவட்டங்களில் சேதமடைந்த 9 பாலங்களைப் புதிதாக நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், கம்பஹா

IMG_1046

முரசு சூறாவளி தீவிரமடைகிறது!

November 2, 2026

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல்

IMG_1045

யாழில் பரபரப்பு! – நடந்தது என்ன?

November 2, 2026

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால்

acci main

அளவெட்டியில் விபத்து: இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

November 2, 2026

யாழ்ப்பாணம், அளவெட்டி – அழுக்கை சந்தி பகுதியில் நேற்றைய தினம் (1) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள்

arrest

கொக்கேய்னுடன் தச்சர் கைது!

November 2, 2026

சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘கொக்கேய்ன்’ போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச

gun

சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி!

November 2, 2026

பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்

hu

மக்களுக்குப் பாரிய சுமை; 12 வரித் திருத்தங்கள் – மனித உரிமைகள் மையம் குற்றம்

November 2, 2026

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருட காலத்தில், மக்களுக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில் 12 வரித்

fuel_1

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

November 2, 2026

நேற்று(1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர