கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் பொலிஸாரால் 26,895 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் சந்தேகத்தின் பேரில் 568 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 236 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 109 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 282 சாரதிகள், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 56 பேர் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,160 பேர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.