நேற்று (21) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலையில் 1,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 343,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,900 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.