யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்கு தாமே தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.
கடும் தீ காயங்களுக்கு உள்ளான குறித்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.