உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு வீரவாள் வழங்கி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு வீரவாள் வழங்கி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சுந்தர், குதிரை வண்டியில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆம்பாக்கம் கிராமத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக நிர்வாகி மதியழகன், குதிரை வண்டி ஏற்பாடு செய்திருந்தார். அதில் வேட்பாளர் சுந்தர் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
வழிநெடுகிலும் குதிரை வண்டியில் சென்றவாறு, பொது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நூதனப் பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஆம்பாக்கம் கிராமத்துக்கு வருகை தந்த வேட்பாளருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, வீரவாள் பரிசளித்தனர்.
இந்த நிகழ்வின்போது, ஒன்றியச் செயலர் சேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.