கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்

45

ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

July 26, 2026

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை

3

த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

July 26, 2026

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க

2

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

July 26, 2026

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக்

hariny

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்

July 26, 2026

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான்

don

கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் : ட்ரம்ப்

July 26, 2026

குள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம்

feve

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை!

July 26, 2026

ய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்

bs

சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி – 30 பேர் காயம்

July 26, 2026

சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த

jail1

அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்

July 26, 2026

தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த

kil

கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

July 26, 2026

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின்

1

மேகதாது விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

July 26, 2026

ஒசூர்: மேகதாது அணையை கட்ட அனுமதி மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர்