காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதில் சர்வதேச அமைப்புகளின் எந்தவொரு தலையீட்டையும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிராகரித்துள்ளது. மேலும் தடயவியல் அதிகாரிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகேஷ் கட்டுலந்த பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தடயவியல் அதிகாரிகளுக்கான கோரிக்கைகளைத் தனது நிறுவனம் அனுப்பியுள்ளதாகக் கூறினார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தேவைகள் குறித்து மதிப்பீடு செய்ய ஐ.நா முன்வந்த போதிலும் தங்களின் இதர கோரிக்கைகளும் இன்னும் கவனிக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“ஐ.நாக்கான காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின்தேவை சார்ந்த மதிப்பீட்டைச் செய்துள்ளது இருப்பினும் அவர்கள் எங்களுக்கு ஒரு தன்னார்வலரைக் கூட வழங்கவில்லை. வேறு சில அமைப்புகளும் தேவைகளை மதிப்பீடு செய்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா-விடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இன்றுவரை அந்தக் கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை. நான் இந்த அலுவலகத்தில் பணியாற்றிய நான்கு ஆண்டுகளில் ஒரு நாடு அல்லது ஒரு சர்வதேச அமைப்பு கூட இந்தச் செயல்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க அல்லது அளவிடக்கூடிய எந்த ஆதரவையும் வழங்கவில்லை. இருப்பினும் பல்வேறு அமைப்புகள் எங்களிடம் வந்து அறிக்கைகளைக் கேட்கின்றன” என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சுதந்திரத்தில் தலையிடாமல் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும் எனவே தனது அலுவலகம் அதன் செயல்பாடுகளில் எந்தவொரு வெளித் தலையீட்டையும் நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க எந்தவொரு சர்வதேச பொறிமுறையையும் அரசாங்கம் எதிர்ப்பதாக நீதியமைச்சர் மற்றும் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
மேற்கூறிய நபர்கள் உட்பட காணாமல் போன பொதுமக்களின் கதி என்ன என்பதைத் தீர்மானிக்கும் முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது.