2024 நவம்பரில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியதிலிருந்து கனடா மக்களும் தங்கள் நாட்டில் இதே போன்ற ஒரு சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.
திங்களன்று வெளியிடப்பட்ட அங்கஸ் ரீட் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுத் தடை விதிப்பதை 75 சதவீத கனடா மக்களும் ஆதரிக்கின்றனர். குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களிடையே இந்த ஆதரவு 70 சதவீதமாக உள்ளது.
மாகாண வாரியான ஆதரவு:
இந்தத் தடைக்கான ஆதரவு பிரிட்டிஷ் கொலம்பியாவில் (81வீதம்) மிக அதிகமாக உள்ளது. மற்ற மாகாணங்களில்:
ஆல்பர்ட்டா: 77வீதம்
அட்லாண்டிக் மாகாணங்கள்: 76வீதம்
ஒண்டாரியோ: 74வீதம்
கியூபெக்: 73வீதம்
மனிடோபா: 72வீதம்
சஸ்காட்செவன்: 70வீதம்
இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
செப்டம்பர் 2025-ல் எடுக்கப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில் 30 நாடுகளில் சராசரியாக 71 சதவீத மக்கள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக அனுமதி வழங்கக்கூடாது என்று கருதுகின்றனர். சமூக ஊடகங்கள் இளைஞர்கள் எதிர்கொள்ளும் “மிகப்பெரிய சவால்” என்று 25 சதவீதத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகள் பின்வரும் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக கனடியர்கள் கவலைப்படுகிறார்கள்:
மனநலம் மற்றும் அடிமையாதல்: 94வீதம்
தவறான தகவல்கள்: 92வீதம்
சைபர் புல்லிங் (இணைய மிரட்டல்): 90வீதம்
ஆபாசமான உள்ளடக்கங்கள்: 85வீதம்
குறிப்பாக டிக்டாக் எக்ஸ்ஃட்விட்டர் ) மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். 48 சதவீதத்தினர் யூடியூப்பையும் தடை செய்ய ஆதரவு அளித்துள்ளனர்.