கனடாவின் அஜாக்ஸில்வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட 24 வயது இளைஞரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது
டரம் பிராந்திய காவல்துறை செவ்வாய்க்கிழமை அதிகாலை அஜாக்ஸில் உள்ள ஒரு வீட்டிற்குள் காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த இளைஞரின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் 24 வயதான திசல் சஞ்சுலா பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 12:40 மணியளவிமற்றும் வெஸ்ட்னி ரோடு (றுநளவநெல சுழயன) சந்திப்பிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் யாரோ அத்துமீறி நுழைந்துள்ளதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வீட்டிற்குள் பலத்த காயங்களுடன் இருந்த பெரேராவைக் கண்டனர். அவருக்கு முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல்துறை அதிகாரி நிக்கோலஸ் கிளக்ஸ்டைன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே இது பொதுவான வீடுபுகுந்து திருடும் முயற்சி அல்ல. அந்த குறிப்பிட்ட நபரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் எவ்வாறு கொல்லப்பட்டார் அல்லது என்ன மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த விபரங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே இது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே காவல்துறை வருவதற்கு முன்னதாகவே இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து கால்நடையாகத் தப்பிச் செல்வதைக் கண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் அப்பகுதி குடியிருப்பாளர்களிடம் பேசி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தங்களது செல்போன் வாகன கமெரா அல்லது வீட்டின் கண்காணிப்பு கமெரா காட்சிகளை வைத்திருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.