ஒன்ராறியோ – ஸ்மித்ஸ் ஃபால்ஸ் (Smiths Falls) பகுதிக்குத் தெற்கே ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில், ஒரு வாகனத்தின் சாரதி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதுப் பெண் ஆவார்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கவுண்டி சாலை 29-இல் (County Road 29) கிட்லி சவுத் எல்ம்ஸ்லி டவுன்லைன் சாலை (Kitley South Elmsley Townline Road) சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கு சாதாரண காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.