கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளில் ஒரு ஆழமான “கலாசார முறிவு” ஏற்பட்டுள்ளதாகச் சனிக்கிழமை தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் சர்வதேசப் பாதுகாப்புப் பேரவையில் கலந்துகொண்ட அமெரிக்க அரசின் செனட்டர்கள், இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.
டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அப்பால் சென்று, பல கனேடியர்கள், அமெரிக்கர்களை “எதிரிகள்” போல் பார்ப்பதுதான் பெரிய பிரச்சனை என்று அமெரிக்க அரசின் செனட்டர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வட கரோலினா மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமெரிக்க செனட்டர் தோம் டிலிஸ், கனடாவின் நேட்டோ பாதுகாப்புச் செலவினம் குறித்து ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
நேட்டோ பாதுகாப்புச் செலவினம் தொடர்பான விடயத்தில், பல ஆண்டுகளாக நிதி இலக்குகளை அடையத் தவறியதால், கனேடிய அரசு ஆனது, நேட்டோ இராணுவக் கூட்டணிக்கு 300 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நிதியை நிலுவைத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்று டிலிஸ் குறிப்பிட்டுள்ளார்.