புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் மிக முக்கியமான, முதன்மையான ஆன்மீக நிகழ்வாக பாரம்பரிய முறைப்படி இந்த கொடியேற்ற விழா இன்று 20.07.2026 காலை இடம்பெற்றது.
கதிர்காமத்தில் நடைபெறும் 14 – 15 நாட்கள் கொண்ட ஆடிப் பெருவிழா, தெய்வானை அம்மன் கோயில் கொடியேற்றத்துடன்தான் உத்தியோகபூர்வமாகத் தொடங்குகிறது.
தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால், அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இக்கொடியேற்றம் அமைகிறது.
இந்த கொடியேற்றத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளும் கலந்து கொண்டார்.