கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.