காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இப்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரித்து பலத்த வீசக்கூடும்.
மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினரும், மீனவ சமூகத்தினரும் இந்த கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரை (முல்லைத்தீவு ஊடாக) மற்றும் கல்பட்டி முதல் பொத்துவில் வரை (கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக) ஆகிய கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இப்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரித்து வீசக்கூடும்.
எனவே, இந்த கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் (விழிப்புடன்) செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மன்னார் முதல் பொத்துவில் வரையான (கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக) கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.