கோவை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஈட்டியுள்ள பிரம்மாண்ட வெற்றி குறித்து, அதிமுக-வின் மூத்த தலைவரும் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான செங்கோட்டையன் வியப்புத் தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் இந்த வெற்றி ஒரு “சரித்திர நிகழ்வு” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
செங்கோட்டையன் பேசுகையில், “வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமல், முதல் தேர்தலிலேயே தவெக சரித்திர வெற்றி பெற்றுள்ளது. விஜய்யை மக்கள் நேசிக்கிறார்கள்; அவர் நேசிக்கின்ற மக்களுக்கு உறுதுணையாக இருப்பார். தற்போது தவெக ஒரு மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது” என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் (அதிமுக) தற்போது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். அதிமுக-வின் மூத்த நிர்வாகி ஒருவரே விஜய்யின் வெற்றியை வெளிப்படையாகப் பாராட்டியதுடன், தனது சொந்தக் கட்சியின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Sengottaiyan #Vijay #TVKVictory #TNElectionResults2026 #BreakingNews #May6 #TamilNaduPolitics #ADMK #ThalapathyVijay #VijayAsCM #HistoryMaker #CoimbatoreNews #GobiMLA #PoliticalShakeup #NewEraTN #CleanPolitics #Election2026 #StalinVsVijay #DravidianPolitics #VijayMakkalIyakkam_