ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 45,000 வேலைகளை வழங்கிக் கொண்டிருக்கும் மாகாணம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு உணவளிக்க உதவும் எங்கள் கோழிப் பண்ணையாளர்களுடன் ஒன்ராறியோ அரசாங்கம் இணைந்து நிற்பதில் பெருமை கொள்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.