களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 190,000 ரூபாய் பணமும், ஒரு நவீன ரக கைபேசியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.