எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.
குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும் யாழில் பல தமிழ்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.