உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தன் கட்சிக்குள் நடப்பவை புரியவில்லை

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20.03.2026) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், உலக விவகாரங்களைப் பேசும் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தனது கட்சிக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் குழுக்கள் உருவாவது குறித்துப் புரியவில்லை.

ரணில் விக்ரமசிங்க அவருக்குச் செய்யப்போகும் காரியம் குறித்தோ, தற்போது பின்னப்படும் வலைகள் குறித்தோ அவருக்கு எவ்விதத் தெளிவும் இல்லை. உண்மையைச் சொல்லும்போது வலிக்கலாம், ஆனால் அதுதான் நிஜம்.

உலகத்தைப் புரிந்துகொண்டு, தனக்கு நடப்பதைப் புரிந்துகொள்ளாத ஒரு துரதிஷ்டவசமான எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு இருப்பது கவலைக்குரியது. கடந்த சில நாட்களாக அவருடைய உரைகளை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் ஒரே விடயத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றார்.

திறைசேரி நிரம்பி வழிகிறது எனக்கூறி, இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள் என்று தேவையற்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார். அடுத்ததாக, இவர்கள் ஒரு விசித்திரமான கதையைச் சொல்கின்றார்கள்.

மத்திய கிழக்கில் போர் வரும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே உலகிற்குத் தெரியும் என்றும், ஜூன் மாதத்திலிருந்தே தங்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் தற்போதைய அரசாங்கம் அதற்குத் தயாராகவில்லை என்றும் கூறுகின்றார்கள்.

இவ்வளவு ‘நிபுணத்துவ அறிவு’ இவர்களுக்கு இருந்திருந்தால், அதனை அமெரிக்காவிற்கோ அல்லது ஈரானுக்கோ வழங்கிப் போருக்குத் தயாராகுமாறு எச்சரித்திருக்கலாமே? இவ்வளவு ‘அறிவுள்ள’ தலைவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன்; தேர்தல் காலத்தில் உங்கள் கட்சிக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் கட்சிக்குள்ளேயே இருந்த அந்தப் பாரிய நெருக்கடி கூடவா உங்களுக்குப் புரியவில்லை? என கேள்வி எழுப்பினார்.

uk

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை வைத்தியரின் குடும்பம் வசிப்பதில் சிக்கல்?

March 22, 2026

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர்,

huwa

ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு

March 22, 2026

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு

ff

பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம்!

March 22, 2026

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்

jaf

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடலுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

March 22, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. யாழ்ப்பாணம்

ceb dea

பூநகரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

March 22, 2026

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில்

cont

எரிபொருள் விலையேற்றம்; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

March 22, 2026

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ceb

அரசாங்கம் அவசர வேண்டுகோள்

March 22, 2026

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

horm

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க 22 நாடுகள் கூட்டறிக்கை

March 22, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த 28-ஆம் திகதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தை அடைந்துள்ளது. ஈரான் மீது

Bus

மாலை 6 மணி முதல் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு

March 22, 2026

இன்று (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பேருந்து கட்டணத் திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில்

minn

பலத்த மின்னல் எச்சரிக்கை

March 22, 2026

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு

dru

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

March 22, 2026

படோவிட்ட பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படோவிட்ட பொலிஸ் சோதனைச்

raj

த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது!

March 22, 2026

திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து