உலகப்புகழ்பெற்ற டெவோன் நீர்வீழ்ச்சி சுற்றுவட்டப் பகுதியில் தீ

உலகப்புகழ்பெற்ற டெவொன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 அறைகளைக் கொண்ட ஒரு கபான முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புல்ல- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை தலவாக்கலை டெவொன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காட்டுப்பகுதியிலேயே குறித்த சம்பவம் இன்று(8.3.2026)ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பாதுகாப்பு நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா வீடுதிக்கு சொந்ததான கபானா எரிவடைந்ததனால் தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

இதனால்; கொட்டகலை நுவரெலியா பிரதானவீதி புகையினால் மூடப்பட்டுள்ளது.

குறித்த தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு அட்டன் நகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் திம்புல்ல பத்தினை பொலிஸார் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தீ விபத்து காரணமாக மின் இணைப்புக்கள், தொலைபேசி இணைப்புக்கள் ஆகியன தீயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

வனப்பகுதி அழிவடைந்ததனால் எமது நாட்டிற்கே உரித்தான அரியவகை தாவரங்கள் சிறிய உயிரினங்கள் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை அளிவடைந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் நீர்ப்பாசனப் பகுதியில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதனால் நீருற்றுக்கள் அற்றுப்போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாத போதிலும் இனந்தெரியாதவர்களால் இந்தத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாகிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

வறட்சியான காலநிலையை அடுத்து காற்று வேகமாக வீசுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியமாகியுள்ளது.

எது எவ்வாறான போதிலும் குறித்த தீவைப்புக்கள் காரணமாக மலையகத்தில் பல பகுதிகளில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே குறித்த தீ வைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவை நடவடிக்கைகளை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம