உயர்மட்ட பாதுகாப்பு பேச்சு

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருக்கிடையிலான தீர்க்கமான உயர்மட்டச் சந்திப்பு டோக்கியோவில் உள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்தநிலை” என்ற கொள்கையின் கீழ், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பு மிக அவசியமானது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கிய புவியியல் அமைவிடம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் வகிபாகத்தைச் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படையின் கப்பல் அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்தமை மற்றும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகள் குறித்து இதன்போது பாராட்டப்பட்டது. எதிர்காலத்தில் கூட்டு கடற்படைப் பயிற்சிகள் மற்றும் பணியாளர் பரிமாற்றங்களை விரிவுபடுத்த இருதரப்பும் உடன்பட்டன.

இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்கு கப்பல்களை வழங்கியமை மற்றும் வானிலை ஆய்வுத் துறைக்காகப் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான ‘டொப்ளர் ரேடார்’ அமைப்பை நிறுவியமை போன்ற ஜப்பானின் பாரிய பங்களிப்புகளுக்கு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளியின் போது ஜப்பான் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் அவர் நினைவு கூர்ந்தார். சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மதித்து, இலங்கையின் அணிசேரா நடுநிலை மற்றும் பக்கச்சார்பற்ற வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஜப்பானுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதாக பிரதி அமைச்சர் இதன்போது மீள உறுதிப்படுத்தினார்.

மேலும், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் ஜப்பான் தேசிய பாதுகாப்பு கலாசாலை ஊடாக இலங்கையர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் குறித்தும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி: