முன்னாள் முதற்பெண்மணி சிராந்தி ராஜபக்ச மருத்துவசிகிச்சைக்காக புதன்கிழமை காலை சிங்கப்பூருக்கு பயணமானார்.
செவ்வாய்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலை அவர் மருத்துவ சிகிச்சைக்காக உறவினர் ஒருவருடன் சிங்கப்பூருக்கு பயணமானார்.
இதேவேளை தேசிய சேமிப்பு வங்கி பணமோசடி தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள சிராந்திராஜபக்ச 24ம் திகதி நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவேண்டும் என விமானம் புறப்படுவதற்கு முன்னர் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பு லேடிரிட்ஜ்வே மருத்துவமனைக்கு சிடிஸ்கானர் இயந்திரத்தை கொள்வனவு செய்யவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெற்ற பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சிராந்தி ராஜபக்ச விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.