மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என […]

செயற்கை நுண்ணறிவின் AI ஆபத்தானது: எலான் மஸ்க் கடும் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான வளர்ச்சி குறித்து எலான் மஸ்க் இதுவரை விடுத்துள்ள மிக வலுவான எச்சரிகைகளில் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பெருகிய முறையில் சக்திவாய்ந்ததாக மாறிவரும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பாரிய ஆபத்துக்களை உருவாக்குவதாகவும், தொழில்துறை அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைச் சுற்றியுள்ள கவலைகள் குறித்துப் பேசிய ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர், செயற்கை நுண்ணறிவு மிகவும் ஆபத்தானதாக மாறக்கூடும் என்பது தெளிவாகிவிட்டதாகத் […]

சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது

சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய – மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக் குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் […]

க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்க திட்டம்?

எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான […]

விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இரவு இடம்பெற்ற மிக மோசமான விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய நகருக்கு அண்மித்த பகுதியில் இரவு 8.00 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த புத்தளம், சாலியவெவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (இ.கெ. இல: 73287) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த எதிர்பாராத விபரீதம் […]

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர், 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ச என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார […]