ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர் அழைக்கப்பட்டு யாழ் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் அரசியலமைப்பு செயன்முறைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒன்றையாட்சிக்கு உட்பட்ட எந்த வடிவிலான தீர்வையும் நிராகரித்தும், திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தீர்வு திட்ட வரைபை தயாரிப்பது என்றும் இணங்கப்பட்டது.

ஸ்ரீலங்காவில் 77 ஆண்டுகளாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்னும் பெயரில் தற்போது ஸ்ரீலங்காவை ஆளும் அனுரகுமார திசநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுக் கொண்டுவரப்படவுள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி அரசு) அரசியல் யாப்பானது ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழர் தேசம், இறைமை அடிப்படையிலான கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு மறுதலிக்கும் ஒற்றையாட்சி வரைபாகும் என்பதுடன் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டுமெனவும் இணக்கம் காணப்பட்டது.

குறித்த செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு, குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட குடிசார் அமைப்புக்கள் அரசியல் தரப்புக்கள், சமயத் தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை செயற்படும் என்றும் இணங்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக, தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதற்காக, வழி நடத்தல் குழுவை தெரிவு செய்து அறிவிப்பதுடன் இச் செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒருங்கிணைப்பாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.தி.விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவார் என்றும் இணக்கங்காணப்பட்டது.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஈழத்தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைப்பதற்கும், அரசியல் விவாதங்களின்போதும் ஆலோசனைகளின்போதும் ஈழத் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த மற்றும் பொதுவான நிலைப்பாட்டை முறையாக முன்வைக்கும் நோக்கில் ஒரு அரசியல் தீர்வுத்திட்ட வரைபை உருவாக்குவதற்காக, ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. (இக்குழுவில் வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் மேலும் உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவர்).

குறித்த தீர்வுத்திட்ட வரைபு தயாரிப்பதற்கான ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவானது.

1. சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கான வரைபு தயாரித்தல்: தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக ஒப்பந்தம் ஒன்று தமிழர் தேசத்திற்கும் – சிங்கள தேசத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படல் வேண்டும். அவ்வாறான சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கான வரைபைத் தயாரித்தல்.

2. விரிவான கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு தயாரித்தல்: தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை கூட்டாட்சி முறைமைக்குள் அனுபவிப்பதற்கான விரிவான தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை தயாரித்தல்.

இக்குழுவானது தீர்வுத்திட்ட வரைபு உருவாக்க செயன்முறைகளை முன்னெடுக்கும்போது, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைபு, (தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்பு வரைபு ஆக்கக்குழுவினரால் தயாரிக்கப்பட்டு ஈழத் தமிழர் சமூகத்தின் விரிவான கலந்தாய்விற்கும் பொதுக் கருத்துப் பெறலுக்கும் உட்படுத்தப்பட்டு, இறுதி செய்யப்பட்டு 10 ஏப்ரல் 2016 ல் வெளியிடப்பட்டது) இடைக்கால தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்புக்கான யோசனைகள், சர்வதேச மட்டத்திலுள்ளதான தேசங்களை அங்கீகரிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமைகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்துவரும் முன்மொழிவுகள் போன்ற யோசனைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றின் சாராம்சங்களையும் அடிப்படை கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்த விரிவான மற்றும் பொதுவான அரசியல் தீர்வுத்திட்ட வரைபை உருவாக்கும்.

இந்தச் செயல்முறையின் ஆரம்ப கட்டமாக, குறித்த வழிநடத்தல் குழு ஒரு உத்தேச அறிக்கையைத் தயாரிக்கும். அதனைத் தொடர்ந்து, அந்த உத்தேச அறிக்கை பொது மக்களது கருத்துக்களை அறிவதற்காக வெளியிடப்பட்டு, வடக்கு–கிழக்கு தாயகப் பிரதேசங்களில் வாழும் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடனும், குடிசார் அமைப்புகளுடனும், அரசியல் – சமூக வகிபாகக்காரர்களுடனும் பொருத்தமான துறைசார் ஆர்வலர்களிடமிருந்தும் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படுவதுடன் திறந்த மற்றும் வெளிப்படையான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பின்னர், அவற்றை கருத்தில் கொண்டு இறுதி அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும். இக்குழுவால் தயாரிக்கப்படும் இறுதி யோசனையானது தமிழ்த் தேசத்தின் ஏகோபித்த தீர்வுத்திட்ட முன்மொழிவாக முன்வைப்பதே இந்த வரைபு உருவாக்கத்தின் நோக்கமாகும். இக்குழுவானது அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் தனது உத்தேச அரசியல் தீர்வுத்திட்ட வரைபை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக

NAMAL

எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடியின் ராஜினாமா மிகவும் தாமதமானது – நாமல் ராஜபக்ஷ

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ,

ff

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களது விபரங்களை உள்ளடக்கிய ஊடக அறிக்கை

April 17, 2026

தமிழ்த்தேசியப்பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட

Apo

வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

April 17, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது