இலங்கையில் முதல் தடவையாக சிறார்கள் பங்குபற்றும் கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டத் திருவிழா

லங்கா ஸ்போர்ட்ரைசன் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர், சிங்ககப் (SingaCup) பிறைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்துள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான அங்குரார்ப்பண கோப்பா சிம்ஹா (சிங்க கிண்ணம்) கால்பந்தாட்டத் திருவிழா கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

இந்தக் கால்பந்தாட்ட திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடத்தப்படும்.

இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சிறார்களின் கால்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் இலங்கையில் முதல் தடவையாக 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதாக சிங்கப்பூர் சிங்ககப் பிறைவேட் லிமிட்டெடின் முகாமைத்துவப் பணிப்பாளர் செல்வகுமார் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

‘பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறார்களை இலக்குவைத்தே இப்போட்டியை நடத்துகின்றோம். இப் போட்டி இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படுவதால் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படமாட்டாது. எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்குபற்ற அனுமதிக்கப்படும். நாங்கள் கொழும்பில் நடத்தும் சிறார்களுக்கான கால்பந்தாட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் என நம்புகிறோம். அதன் பின்னர் 8, 14, 16 வயதுடைய சிறுவர்களுக்கும் போட்டிகளை நடத்த எண்ணியுள்ளோம். அத்துடன் பிற மாவட்டங்களிலும் இந்தப் போட்டியை விஸ்தரிக்க எண்ணியுள்ளோம்.

‘இலங்கையில் நடத்தப்படும் கோப்பா சிம்ஹா கால்பந்தாட்டப் போட்டியில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் குறைந்தது நான்கு போட்டிகளில் பங்குபற்றும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும். முதல் சுற்று முடிவில் முன்னிலையில் இருக்கும் அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும். போட்டியில் சம்பியனாகும் அணிக்கு சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிங்ககப் போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும்’ என செல்வகுமார் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அணிக்கு 11 வீரர்களைக் கொண்ட சிங்ககப் (சிங்க கிண்ணம்) கால்பந்தாட்டப் போட்டி 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் 12 வயதினருக்கு மாத்திரம் நடத்தப்பட்ட இப் போட்டி 8, 10, 14, 16 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கும் நடத்தப்படுகிறது. இப் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 170 முதல் 180 அணிகள் பங்குபற்றிவருகின்றன.

இந்தத் தகவல்களையும் செல்வகுமார் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு