இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தொடர் ஒடுக்குமுறையைக் கண்டிப்பதுடன், துள்ளிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய கனடியத் தமிழர் பேரவை கோரிக்கை 

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ், ‘ஹிப்-ஹாப் சங்கீ’ (Hip-Hop Sangee) என்று பரவலாக அறியப்படும் தமிழ்ப் பாடகர் கணேஷ் குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டதை கனடியத் தமிழர் பேரவை (CTC) வன்மையாகக் கண்டிப்பதுடன், அவரை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறது.
இந்தக் கைது நடவடிக்கையானது இலங்கையின் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பங்களிப்பு, மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தலாகும். அண்மையில் தமிழ் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் பிரதீபனின் ஐந்து புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றுள்ளமை, மாற்றுக் கருத்துக்கள் மற்றும் சுதந்திரமான பேச்சுரிமை மீது அதிகரித்து வரும் ஒடுக்குமுறைப் போக்கை வெளிப்படுத்துகிறது.
தன்னிச்சையான கைதுகள், குற்றச்சாட்டுகள் இன்றிய நீண்டகாலத் தடுப்புக்காவல் என்பன முறையான சட்ட நடைமுறை மீறல்களுக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக நாடுகளால் நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டுவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதையிட்டு கனடியத் தமிழர் பேரவை தனது ஆழந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
சங்கீதனின் கைது மற்றும் தீபச்செல்வனின் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியன, இலங்கையில் சுருங்கி வரும் ஜனநாயகக் கட்டமைப்பு குறித்தும், தமிழ் அரசியல் வெளிப்பாடுகள், அறிவுசார் கலந்துரையாடல்கள் மற்றும் அமைதியான செயல்பாடுகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது குறித்தும் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன.
“ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படைத் தூண் கருத்துச் சுதந்திரம் ஆகும். அமைதியான முறையில் குரல் எழுப்பும் தனிநபர்களைக் கைது செய்வதும், வெளியிடப்பட்ட நூல்களை முடக்குவதும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பலவீனப்படுத்துவதோடு, இலங்கையின் உண்மையான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் சீர்குலைக்கிறது” என கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் சிறீதரன் துரைராஜா தெரிவித்தார்.
கனடியத் தமிழர் பேரவை பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
• இலங்கை அரசாங்கம் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்து அவரது அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் தீபச்செல்வனின் இன்னும் வெளியிடப்படாத இரண்டு புத்தகங்கள் மீதான நடவடிக்கைகள் உட்பட, வெளியீடுகள் மற்றும் கருத்து வெளிப்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அத்துடன் சிந்தனை, கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கான உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
• இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, அதற்குப் பதிலாக சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முழுமையாகக் கட்டுப்படும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
• கனடா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும்; சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோர வேண்டும்; மேலும் அர்த்தமுள்ள மனித உரிமைச் சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகச் சுதந்திரங்களை ஊக்குவிக்க இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
• ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜனநாயகப் பண்புள்ள நட்பு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம், இந்த நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, இலங்கையில் பொதுமக்கள் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் அனைத்து சமூகங்களுக்குமான நீதி, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சுதந்திரங்களை மேம்படுத்துவதில் கனடியத் தமிழர் பேரவை என்றும் உறுதியாக நிற்கிறது.
Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட