இலங்கையின் மலையக மக்களுக்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர முகவரி!

மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்றையும் நிரந்தர முகவரியையும் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அசாதாரண சூழ்நிலையினால் வீடுகளை இழந்த மக்களுக்காக பாலிந்தநுவர, பெலேத மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் முஹமதியாவத்தை புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 17 வீடுகளை அமைக்கும் பணிகள் நேற்று(03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் கலந்துகொண்டார்.

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஹமதியாவத்தை புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு வீடு 34 இலட்சம் ரூபா செலவில் 17 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

அவற்றில் 12 வீடுகள் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழும், எஞ்சிய 5 வீடுகள் இந்திய வீட்டுவசதி உதவித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டுடனும் அமைக்கப்படவுள்ளன.

9 ஆண்டுகளாக கடும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வீடற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக இரு அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 16 பயனாளிகளுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதமான வீடமைப்பு உதவி காசோலைகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதன் முதற்கட்டத்தின் கீழ் 08 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டு வீடமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்டத்திற்காக 55 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மலையக மக்கள் இந்நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்று, முகவரி மற்றும் அடையாளத்தை வழங்க முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டமிடலின் கீழ் அதற்கான பணிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகையாக 2,000 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், குறித்த வீடுகளை விரைவாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்