இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு புதிய நியமனம்!

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 4 வெவ்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 154 பேருக்கு புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வெறும் தொழில்சார் அறிவையும் திறமையையும் தாண்டி, மனிதாபிமானத்துடன் கூடிய சேவையை சுகாதாரத்துறையினர் வழங்கவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கதிரியக்க நிபுணர்கள் 69 பேருக்கும், ஒலியியல் தொழில்நுட்பவியலாளர்கள் 10 பேருக்கும், பூச்சியியல் உதவியாளர்கள் 4 பேருக்கும், ஆய்வக உதவியாளர்கள் 71 பேருக்கும் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி, சவாலான காலகட்டத்திலும் நாட்டின் இலவச சுகாதார சேவையை மேம்படுத்த அதிகப்படியான நியமனங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்கள் வெறும் தொழில்நுட்ப அறிவை மட்டும் கொண்டிருக்காமல், நோயாளர்களிடம் அன்பாகவும் மனிதாபிமானத்துடனும் பழக வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் உபகரணங்களுக்கு நாம் நீதியாகச் செயல்பட வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உரையாற்றுகையில், குறிப்பாகப் பெண் கதிரியக்க நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மார்பக புற்றுநோய் பரிசோதனைகளுக்கு பெரும் உதவியாக அமையும் எனச் சுட்டிக்காட்டினார். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற மனப்பாங்குடன் நோயாளர்களை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் மொத்த அரச ஊழியர்களில் 1,50,000 பேர் சுகாதாரத்துறையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

தொழில்சார் உரிமைகளுக்காகப் போராடுவதைப் போலவே, நோயாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பது ஊழியர்களின் கடமை என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்

ele co

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தாமதம்: தேர்தல் ஆணைக்குழு அதிருப்தி

April 21, 2026

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல்