பேரிடருக்கு மத்தியில் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டை விட 2.14 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3வீத அதிகரிப்பை காட்டியுள்ளது..
டிசம்பர் முதல் வாரத்தில் இலங்கையின் சுற்றுலாவிற்காக இந்தியா மிகப் பாரிய பங்களிப்பை வகித்துள்ளது. இதில் 8,890 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
ரஷ்யா 4,735, ஜெர்மனி 4,399, இங்கிலாந்து 3,053, சீனா 2,571 என்ற எண்ணிக்கையில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, போலந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் 344,309 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் எதிர்பார்த்துள்ளது.