மதுரை:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சி தொடரக் கூடாது எனத் திட்டம் தீட்டுவதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருடர்கள் திட்டம்:
இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேசியதாவது, “ஒரு நல்லாட்சியைக் கெடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். திமுகவை எதிர்த்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சி செய்தனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை எடப்பாடி பழனிசாமி என்ற திருடரும் திமுக திருடர்களும் கூட்டணி சேர்ந்து இந்த ஆட்சி தொடரக் கூடாது எனத் திட்டம் தீட்டுகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக நன்றாக இருந்தது. ஆனால், பத்து முறை தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை முகவரி இல்லாமல் அழித்துவிட்டார்,” என்று ஆவேசமாகப் பேசினார்.
தனித்துப் போட்டியிட்ட விஜய்:
தொடர்ந்து பேசிய அவர், “எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டுத் தவெக ஆட்சியமைத்தோம். ஆனால், திமுகவினர் முப்பத்து ஐந்து கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர். அறிவாலயத்துக்குத் தண்ணீர் கேன் கொண்டு செல்பவர்களைக் கூடக் கூட்டணி வைத்துக்கொள்ள அழைத்தனர். எந்தக் கூட்டணியும் வைக்காமல், முதலமைச்சர் விஜய் உறுதியாக ஆட்சியமைத்தார்,” என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
#TVK #Mustafa #DMK #AIADMK #Seeman #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive