செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய (09) அகழ்வின் போது, மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், இதுவரை 327 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 311 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 20ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்ற நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.