சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இந்தியாவுக்கெதிரான போட்டியைப் புறக்கணிப்பதில் தவிர்க்க முடியாத மஜூர் சரத்தைப் பயன்படுத்தியமை குறித்து விரிவாக விளக்கமளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் சபை வினவியுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள குறித்த போட்டியைப் புறக்கணிப்பதற்கான காரணமாக அரசாங்க உத்தரவுகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் சபை கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவிர்க்க முடியாத மஜூர் சரத்து யாதெனில் ஒரு தரப்பானது தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாலான நிகழ்வால் தமது கடப்பாடுகளில் இருந்து பின்வாங்குவதை அனுமதிக்கும் சட்ட ஏற்பாடு ஆகும்
பொதுவாக இயற்கைப் பேரிடர் அல்லது போரின்போது இந்நிலை பயன்படுத்தப்படுமென்றபோதும் சர்வதேச கிரிக்கெட் சபை நிகழ்வுகளின் பங்கேற்புகளில் அரசாங்க உத்தரவொன்றையும் தவிர்க்க முடியாத மஜூர் சரத்தைப் பயன்படுத்தக் கூடிய வகையில் காணப்படுகின்றது.