ஆதார வைத்தியசாலை பிணவறையில் யுவதியின் சடலத்தை வன்புணர்ந்த விவகாரம்: அதிரடி திருப்பம்

டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா (CCTV) தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் பொறுப்பிலுள்ள CCTV தரவுகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைக் குழுவினர் பரிசோதித்த காட்சிகளைத் தவிர மேலதிக ஆதாரங்கள் ஏதும் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் 2026.05.18 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அவமதிப்புச் சம்பவம் கடந்த மாதம் (23) ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இம்மாதம் (03) ஆம் திகதி பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து, முறையான விசாரணையைக் கோரிய பின்னரே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

போராட்டத்தின் விளைவாக, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நிபுணத்துவ வைத்தியர்கள் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வைத்தியசாலையிலிருந்து நீக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

bee

பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

March 15, 2026

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய

566

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

March 15, 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில்

dea

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

March 15, 2026

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை

i

தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் கோரிக்கை

March 15, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப்

ran

அசோக ரன்வலவுக்கு நீதிமன்றம் பிடியாணை

March 15, 2026

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிடியாணை பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த

ma

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகன வழக்கு

March 15, 2026

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல்

irakk

43,000 கட்டடங்கள் ஈரானில் சிதைவு

March 15, 2026

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள்

3

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

March 15, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி

56

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட மறுசீரமைப்பு

March 15, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியைப் பலப்படுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், விசேட பயிற்சிப் பட்டறையொன்று வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில்

katt

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர்

March 15, 2026

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

mack

நடனப் புயல் – இசைப் புயல் பாடல் மாமல்லபுரத்தின் சிற்பங்களின் பின்னணியில்…

March 15, 2026

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடும் ‘மாக்கரீனா..’ எனத் தொடங்கும் பாடலும், அதற்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா

si

சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம்

March 15, 2026

‘புதுமுக நடிகருக்கு ரசிகர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்களா!? என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் எம்முடைய முதல் படத்திலேயே நல்ல