2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 135 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விபத்துக்களினால் 15 சாரதிகளும் 50 பாதசாரிகளும் உயிரிழந்துள்ளன.
சாரதிகள் அனைவரும் தங்களது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து பொறுப்புடன் பஸ்ஸை செலுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.