இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நாட்டில் இடம்பெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நேற்று (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 32 வீரர்களும் அதிகாரிகளும், அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 27 வீரர்களும் அதிகாரிகளும் இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானச் சேவையின் 8D-510 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.