அவுஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி, குடியுரிமை, சுங்கம் மற்றும் பல்வகை கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தக் கடினமான காலகட்டத்தில் ஜூலியன் ஹில்லின் இலங்கை விஜயம், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் ஆதரவளிப்பையும் வலியுறுத்துகிறது.
‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜூலியன் ஹில், நிவாரண பங்காளர்களை இன்று சந்தித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜூலியன் ஹில், பெண்கள் மற்றும் இளம் பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பாப்புலேஷன் ஃபண்ட் (UNFPA) இலங்கை ஊழியர்களை சந்தித்து உரையாடினார்.
பிராந்திய இருப்பு முன்னெடுப்புத் திட்டம் (Regional Prepositioning Initiative) மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பாப்புலேஷன் ஃபண்ட் (UNFPA) உடனான அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான கூட்டாண்மை எடுத்துக்காட்டப்படுகிறது.