அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுமார் 40 அரசாங்க வாகனங்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அரசாங்கத்திற்கு தோராயமாக 9 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் மேலதிக விசாரணைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்காவே நீதிமன்றத்தினால் இந்த வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.