சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களைக் குறைக்கவும், வருவாயைப் பெருக்கவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில், புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, பேருந்து பயணச்சீட்டுகளின் பின்புறம் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலம், பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள்களை (Paper Roll) இலவசமாகப் பெற்று, போக்குவரத்துக் கழகங்களின் சுமையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ஆறு மாதங்களுக்குத் தேவையான சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு பயணச்சீட்டு காகிதச் சுருள்களை, விளம்பரதாரர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மூலம் விலையில்லாமல் கொள்முதல் செய்ய மின்னணு ஒப்பந்தப்புள்ளி (E-tender) கோரப்பட்டுள்ளது. இதற்கான விபரங்கள் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உற்பத்தியாளர்கள், சிறு-குறு வணிக நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அச்சக நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறையின் வருவாயை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, அரசின் பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
#TNTransport #BusTicketAds #RevenueGeneration #TamilNaduGovernment #Innovation #TransportDept #GovtInitiative #Tender #BusinessOpportunity #PublicTransport #RevenueStream #BreakingNews #BMNews #TamilNaduNews #LatestUpdate #EconomicStrategy #GovernmentEfficiency #TamilNews #Governance #Modernization