அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நானாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமெரிக்கா, ஈரான் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்று, சமாதானம் ஏற்படுவதற்கு இருக்கும் நிலையிலே இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த சமாதான பேச்சுவார்த்தையில் ஓமான வெளிவிவகார அமைச்சர் இருந்துள்ளார். அவர் இந்த சமாதானம் தொடர்பில் உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்கு தயாராகி வரும்போதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதனால் இந்த தாக்குதலை ஆரம்பித்தவர்கள் யார் என்பது தெளிவாகிறது.

இந்த யுத்தத்தின்போது அரசாங்கம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் உண்மையில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருப்பது தொடர்பில் எதிர்க்கட்சியாகிய நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இந்த நிலைமையில் நாங்கள் எடுக்கும் நிலைப்பாடு மிகவும் முக்கியமாகும்.

சுதந்திரத்திற்கு பின்னர் எமது தலைவர்கள் வெளிநாட்டு கொள்கை அடிப்படையில் எமது நாட்டை கெளரவமான ஒரு நிலைக்கு கொண்டுவந்த முறை தொடர்பில் பல உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் மகா யுத்தத்தின்போது ஜேஆர் ஜயவர்த்தன ஐக்கிய நாடுகள் மாநாட்டின்போது, தர்ம போதனை வாக்கியம் ஒன்றை சுட்டிக்காட்டி ஆற்றிய உரை எமது மிகவும் முன்மாதிரியாகும். அதேபோன்று சிறிமா அம்மையார், இந்திய சமுத்திர வலயம் சமாதான வலயமாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்காெண்ட பிரேரணை எமக்கு மேற்கொண்ட பாரிய சக்தியாகும். இதுவும் எங்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும். அதேபோன்று இந்திய சீனா மோதலின்போதும் சிறிமா அம்மையார் இலங்கையை அதில் தலையிடச்செய்து இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இது வெளிநாட்டு கொள்கையில் உயர்ந்த நிலைக்கு சென்ற முன்மாதிரியாகும்.

ஆனால் இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் அவ்வாறான சாதகமான எந்த நடவடிக்கையையும் நாங்கள் இதுவரை காணவில்லை. ஈரான் கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு 11 மணித்தியாலம் வரை அனுமதி வழங்காமல் இருந்தது, வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையிலா என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் முதலாவது கப்பல் தாக்கப்படும்வரை காத்திருந்துவிட்டு, ஈரானின் இரண்டாவது கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்கியிருந்தது, அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையின் பிரச்சினையால் ஏற்பட்ட நிலையா என்ற பிரச்சினை எமக்கு இருக்கிறது.

மேலும் எமது வெளிநாட்டு கொள்கையில் வேறு தரப்பினரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இது இலங்கையில் சுயாதீனத்தன்மை தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.இதன்போது எமது நாட்டுக்குள் செயற்பட வேறு நாட்டின் அனுமதியை பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? இது பாரிய பிரச்சினையாகும். சர்வதேச ஊடகங்களிலும் எமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

எனவே இந்த யுத்தத்தின்போது நாங்கள் நாடுநிலையாக இருந்தாலும் உறுதியான வெளிநாட்டு கொள்கை இருக்க வேண்டும். வரலாற்றில் எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் வெளிநாட்டு கொள்கையில் நாட்டுக்கு கெளரவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்து வந்துள்ளது என்றார்.

gun

யால சரணாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

March 21, 2026

யால தேசிய வனப்பகுதியின் கிரிந்த, பெப்புவ (Bebuwa) வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) காலை துப்பாக்கிச்

kap

அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

March 21, 2026

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக

chandrasekar

அரசு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் பயணிக்கும்

March 21, 2026

எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என

jail

பாதாள உலகக் குழுவினரின் சகாக்கள் 15 பேர் கைது

March 21, 2026

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த

vadd

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

March 21, 2026

ழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இன்றைய தினம் (21) அமைதியான முறையில்

56

நாட்டின் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு

March 21, 2026

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை

drug

சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி?

March 21, 2026

காலி – கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (20) சந்தேக நபர் ஒருவர்

imf

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை

March 21, 2026

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய

ce

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

March 21, 2026

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

death

முச்சக்கரவண்டி சாரதி தற்கொலை!

March 21, 2026

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில்

kemunu

நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

March 21, 2026

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு

gff

வாத்துவையில் ரயில் – கார் மோதி விபத்து

March 21, 2026

வாத்துவ பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர். மருதானையில்