அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு கோடீஸ்வரன் கண்டனம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பொதுமக்களை பகடைக்காயாக வைத்து தமது தேவைகளை நிறைவேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை கேடயமாக வைத்து போராடுவதை நிறுத்த வேண்டும். இன்று நோயாளர்கள் பெரும் பாதிக்கப்படுகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் மிகவும் பாரிய பிரச்சினையாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் காணப்படுகிறது. இவ்வாறான பணிப்பகிஸ்கரிப்பு போன்ற விடயங்கள் மக்களின் உயிருடன் விளையாடும், அவர்களின் வாழ்க்கையில் விளையாடும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. அந்த சங்கத்தினால் தமக்கு தேவையானவற்றை சுகாதார அமைச்சின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

பொதுமக்களை பகடைக்காயாக வைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை கேடயமாக வைத்து போராடுவதை நிறுத்த வேண்டும். இன்று நோயாளர்கள் பெரும் பாதிக்கப்படுகின்றனர். கிளினிக் சேவைக்கு மாதத்திற்கு ஒருதரம் வரும் நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் திரும்புகின்றனர். பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பிச் செல்வது கவலைக்குரிய விடயமே.

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள ரேடியோ தெரபி இயந்திரம் பழுந்தடைந்துள்ளது. அங்கு புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் இருக்கின்றனர். கடந்த மாதம் இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளதுடன்,இன்னும் அது சீர் செய்யப்படவில்லை.

தேவையான சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியாமல் அந்த வைத்தியசாலையை நம்பியிருக்கும் அந்த பிரதேச நோயாளர்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதனால் அந்த இயந்திரத்தை உடனடியாக திருத்துமாறு நான் சுகாதார அமைச்சை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட