வடக்கு கியூபெக்கின் மிஸ்டிஸினி கிரி பிரதேசத்தில், நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்த அமைதியான பழங்குடியின மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு ஈயூ ஈனு (Eeyou Eenou) காவல்துறையினர் சென்றபோது, குண்டுகளால் துளைக்கப்பட்ட ஒரு காரையும், அதனுள் படுகாயங்களுடன் இருந்த இரண்டு இளைஞர்களையும் கண்டெடுத்தனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 30 வயதான பெடாபின் நீபோஷ் (Bedabin Neeposh) மற்றும் 29 வயதான டேனியல் பெனாக் (Daniel Benac) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையைத் தொடங்கிய கியூபெக் மாகாண போலீசார் (SQ), இது திட்டமிடப்பட்ட ஒரு குற்றச்செயல் என்றும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.