”ஒரு தேர்தல் தோல்விக்காகத் தலைமையை மாற்றத் துடிப்பது முறையற்றது” என, பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை வியூகவாதி ஜென்னி பைர்ன் (Jenni Byrne) தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த தோல்வி மற்றும் கட்சித்தலைவர் பொய்லிவ்ரே தனது சொந்தத் தொகுதியிலேயே தோற்றமை குறித்துக் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது.
மேலும், கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ‘தலைமைத்துவ மறுஆய்வு’ வாக்கெடுப்பு நடைபெறும் நிலையிலேயே ஜென்னி பைர்னின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
மிதவாத வாக்காளர்களைக் கவர பொய்லிவ்ரே தனது ஆக்ரோஷமான பேச்சைக் குறைக்க வேண்டும் என்ற விமர்சனத்தையும் ஜென்னி பைர்ன் (Jenni Byrne) நிராகரித்தார்.
அதேவேளை, பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில், பொய்லிவ்ரேவின் செல்வாக்கு சரிந்து வருவதை ஜென்னி பைர்ன் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.