நாடாளுமன்றத்தில் இன்று (09.06.2026) நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில், தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்புப் படைகளின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கருத்துச் சுதந்திரமா? பயங்கரவாதமா?:
விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவர் பிரபாகரனையோ பற்றிப் பேசுவது என்பது ஒரு ‘கருத்து’ மாத்திரமே தவிர, அது பயங்கரவாதம் அல்ல! சட்டப்படி அதனைத் தடுக்க முடியாது. அரசாங்கம் தனது அரசியல் தோல்விகளை மறைக்கவே அவசரகால சட்டத்தையும், பயங்கரவாத தடைச்சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிறதுஎன அவர் தெரிவித்துள்ளார்.