அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தற்போதைய மேயர் Karen Bassஸை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் Los Angeles நகரின் மேயராகப் பொறுப்பேற்கும் முதல் ஜனநாயக சோசலிச (Democratic Socialist) வேட்பாளர் மற்றும் முதல் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுகிறார்.
வீடற்றோரின் மறுவாழ்வு, குறைந்த வாடகை வீடுகள் கட்டுமானம் மற்றும் நகரக் கட்டமைப்பு சார்ந்த வாக்குறுதிகளை முன்வைத்துத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நித்யா ராமன், தற்போதைய மேயருக்குப் பலத்த போட்டியைக் கொடுத்துள்ளார்.
கேரளாவில் பிறந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நித்யா ராமன், தனது 6 வயதில் அமெரிக்காவிற்குச் சென்று குடியேறினார். ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி பல்கலைக்கழகங்களில் நகர்ப்புற திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.