IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு குணமடைந்த 22 மாலுமிகள் விமானப்படை முகாமிற்கு மாற்றம்!

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன் 2026’ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான ‘IRIS Bushehr’ என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது.

அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர்.

இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

for

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

March 9, 2026

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லத் தயாராக இருந்த சுமார் 3,000 இலங்கைர்கள் போர் நிலைமை காரணமாக செல்ல முடியாமல்

sure

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்; சுரேஷ் சாலே தொடார்பான பல மர்மங்கள் வெளிப்படுகின்றன?

March 9, 2026

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன்

Ravika

தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

March 9, 2026

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி

evu

234 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன – குவைத்

March 9, 2026

குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

akku

அக்குரணையில் தீ

March 9, 2026

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் நேற்று

mes

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு

March 9, 2026

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள்

kug

யாழில் லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

March 9, 2026

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய

ir

பதற்றம் உச்சம்; ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீச்சு

March 9, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள்

wi

மக்களின் பல விடயங்களைப் பாதிக்கும் மதுபானசாலைகளுக்கு எதிராகப் போராட்டம்

March 8, 2026

குடும்பங்களின் அமைதி பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு

wi

வீடொன்றில் சூட்சுமமாக பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது

March 8, 2026

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு

Anthonysil

வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுவதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

March 8, 2026

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி

vaal

வவுனியாவில் வாள்வெட்டு; இருவர் காயம்

March 8, 2026

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026)