மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் போராட்டங்களைத் தடுக்க முடியாது – முஜிபுர் ரஹ்மான்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால், அதற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்து செல்லும் நிலையில் எதிர்வரும் ஜூன் மாதமாகும்போது அரச ஊழியர்கள், தனியார் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு கோரி வீதிக்கிறங்கும் நிலை இருக்கிறது. இதனை அறிந்துகொண்டே ஜனாதிபதி 2027வரை சம்பள அதிிகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்திருந்தார்.

ஆனால் தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு அதிகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அதற்கு மாற்றமான கருத்தை தெரிவித்து வருகிறார். ஏனெனில் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் காரணமாக சமூகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்று அனைத்து இடங்களிலும் பணி பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. சுகாதார துறையில் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்புித்துள்ளனர். அதேபோன்று கல்வித்துறையில், மறுசீரமைப்பை கொண்டுவந்ததன் மூலம் பாரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று மீனவ பிரஜைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்த பெரும்பாலானவர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் முரண்பட ஆரம்பித்துள்ளனர் என்பதை எங்களுக்கு காணக்கூடியதாக இருக்கிறது.

அதனால் இவர்கள் அரசாங்கத்துடன் மோதும் நிலை ஏற்படும்போது அதனை தடுப்பதற்காக அரசாங்கம் வெள்ளிக்கிழமை அவசகால சட்டத்தை மீண்டும் அனுமதித்துக்கொண்டுள்ளது. தித்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் நூற்றுக்கு 80வீதம் பூர்த்தி செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் அவசரகால சட்டம் எதற்கு என கேட்கிறோம். தித்வா புயல் ஏற்பட்டபோது, அனைத்து துறைகளையும் முகாமைத்துவம் செய்துகொள்வதற்கான ஒரு விடயமாகவே இந்த அவசரகால சட்டம் தேவையாக இருந்தது. தற்போது அந்த நிலைமை முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் மேலும் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டு செல்கிறது.

ஆனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீீடித்துக்கொள்வதற்கான காரணம் என்னவென்றால், எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்குள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது.

அவசரகால சட்டம் தேவையில்லை, அவசரகால சட்டத்தை அடக்கு முறைக்கு பயன்படுத்துவார்கள் என எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தவர்கள் தற்போது எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடும் என அரசாங்கம் அச்சப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

அதனால் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் அரசாங்கத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், அதற்கு எதிராக மக்கள் அணிதிறலுவார்கள். அதனை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது என்றார்.

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்