தமிழ்த் தேசிய பேரவை தமிழக தரப்பினரை தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் அணுகத் திட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ்த் தேசிய பேரவை அணுக திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பேரவையினர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை நேற்று (15.11.2025) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து, சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா பலமாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து போகாமல் இலங்கையின் மிக மோசமாகியுள்ள பொருளாதாரத்தை மீள உயர்த்த முடியாத நிலை உள்ளது. […]

ஒரு வீட்டில் திருடப்பட்ட லொரி மோதியதில் ஒருவர் பலி: நான்கு பேர் காயம்

கந்தான, மரியா மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று சனிக்கிழமை (15) இரவு நிறுத்தப்பட்டிருந்த லொரியைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் இரண்டு விபத்துகளில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். கந்தான காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த லொரியைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை லொரியின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் துரத்திச் சென்றனர். சந்தேக நபர் படகம நோக்கி […]

இன்று பொப்பி மலர் தினம்

ஆயுதப்படை நினைவு மற்றும் பொப்பி மலர் தினம் கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. காயங்கேணி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு மீனவர்கள் வாகரைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சகிதம் சென்ற பொலிஸார், உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் முக்கிய சேவைகள் வரையறைக்குள் வருகின்றன!

இலங்கையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நாளைய தினம் முதல் சில முக்கிய சேவைகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களினால் வழங்கப்படும் சில முக்கிய சேவைகளே இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மருந்தகங்களில் மருந்து கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் மருந்து சீட்டுக்கள் மற்றும் தனியார் தனியார் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சீட்டுகள் என்பன வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுகாதார துறையில் சில முக்கிய […]

அரசாங்கம் தோல்வியை தழுவும் போது ஜே.வி.பி ஆயுதம் ஏந்தும்

அரசாங்கம் தோல்வியை தழுவும் போது ஜே.வி.பி ஆயுதம் ஏந்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை விவாதத்தில் (15.11.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சில விடயங்களை எனக்கு நிரூபிக்க முடியும். ஆனால் இந்த நாட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்படும். ஆதலால் நாடாளுமன்றில் மட்டும் சில விடயங்களை குறிப்பிடுகிறேன். 88-89ஆம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்தி […]

கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்காவை திறக்க நெருக்கடி?

கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும், இம்மாத இறுதியில் திறக்க அரசு தரப்பில் நிர்ப்பந்திப்பதால், நெருக்கடிக்கு இடையே அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர். கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. 2024 அக். 6ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, 2025 ஜூனில் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.போதுமான நிதி ஒதுக்காததால், தாமதமாகி வந்தது. கூடுதல் நிதி கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில், உலக புத்தொழில் மாநாட்டை […]

ஜி.வி பிரகாஷ் சம்பளமே வாங்காமல் இசையமைத்துள்ளாரா ?

மாஸ்க் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக ஜி.வி பிரகாஷ் சம்பளம் வாங்கவில்லையாம். மேலும் பல படங்களுக்கு ஜி.வி பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசையமைத்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் -ஆண்ட்ரியா நடிப்பில் மாஸ்க் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. தயாரிப்பாளராக வெற்றிமாறன் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வருகின்றார். இப்படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் கடைசி படமாம். […]

விக்னேஷ் சிவன் -பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் LIK

விக்னேஷ் சிவன் -பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் டிசம்பர் மாதம் LIK என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தை தயாரிப்பாளர் லலித் பார்த்துவிட்டு தில்லான ஒரு முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முழு விவரங்களை தற்போது பார்க்கலாம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியிருக்கும் LIK திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஒரு சில முறை இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாக டிசம்பர் 18 ஆம் தேதி இப்படம் […]