68 வயதுடைய பெண் கொலை: விசாரணை ஆரம்பம்

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை கடந்த 14 ஆம் திகதி இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 ஆம் திகதி காலை பெண் கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் அப்பகுதியை விட்டு […]
வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வூட்லர் அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் செல்லும் போக்கு அதிகரித்து வருவதை பொலிஸ் அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது சட்டவிரோதமானது என்றும், இந்த வாடகை வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸ் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். வெளிநாட்டு […]
விபத்தில் யாசகர் பலி

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பாதசாரி, சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் அந்தப் பகுதியில் ஒரு யாசகர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக லொரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு […]
சர்ச்சைக்குள்ளான புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (17) இது தொடர்பில் விளக்கமளித்து பேசும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையிலேயே வைக்குமாறு நாம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால்,அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் […]
கைவிடப்படும் நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை இந்தியாவுடன் கூட்டிணைந்து புதுப்பித்தல் மற்றும் மீளமைத்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை மேம்படுத்துவதற்காக கடந்த அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட ஆர்வ வெளிப்பாடுகளை (EOI) தொடர்வதா அல்லது டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் உடன் இணைந்து புதிய ஆர்வ வெளிப்பாடுகளை அழைப்பதா என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் ஆர்வ வெளிப்பாடுகளை […]
வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கையர்; தவிக்கும் மனைவி, பிள்ளைகள்

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார். படபோலாவின் கொண்டகலாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரிந்து ஷனகா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சிகரெட், மதுபான பாவனையை விரும்பாத என் கணவன் விருந்தொன்றின் போது கொலை செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என மனைவி குறிப்பிட்டுள்ளார். “என் கணவர் ஒரு தச்சர். எங்களுக்கு திருமணமாகி 17 […]
டோனி கைது

தெகிவளை, கல்கிஸ்ஸ தொகுதியின் JVP – NPP அமைப்பாளரும் வேட்பாளருமான (குடு/தூள்) போதை கடத்தல் வியாபாரி டோனியை போதைவஸ்து தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலவச மருத்துவ முகாம்

36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் நீதிராஜா மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 டி4 இன் ஆளுநர் லயன் மகேஷ் கட்டுலந்த மற்றும் இரண்டாவது உப ஆளுநர் லயன் தினேஷ் தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாதம் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு மாதம் என்பதால் லயன்ஸ் கழகத்தைச் […]
கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

கொழும்பு – காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இரண்டு இளைஞர்களும் ‘போர்ட் சிட்டி’ வளாகத்தில் படகு உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் மஹரகம பகுதியில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.
1996ஆம் ஆண்டே செம்மணி புதைகுழியை தோண்டியிருக்க முடியும்; நீதிபதி இளஞ்செழியன் அதனை மண் போட்டு மூடினார் – எம்.பி அர்ச்சுனா

1996ஆம் ஆண்டிலேயே செம்மணி புதைகுழியை தோண்டியிருக்க முடியும். ஆனால் நீதிபதி இளஞ்செழியன் அதனை புல்டோசர் கொண்டு மண் போட்டு மூடினார் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மாகாண சபைத் தேர்த்தலில் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக இப்போது போட்டியொன்று ஆரம்பித்துள்ளது. […]