பேராயர் முக்கிய கோரிக்கை
பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சில போதைப்பொருள் கடத்தல்களுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாக வலியுறுத்தினார். இன்று (06) பேருவளை பண்டாரவத்தையிலுள்ள புனித லாசர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டார். சிலரின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த செயற்பாடுகள் பாரிய […]
தனியார் தேவைக்காக பொது இடத்தை பறிக்க வேண்டாம்

கொட்டகலை, ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரொப்கில் தோட்டத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறித்த பொது இடம் பல ஆண்டுகளாக இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் திருவிழாக்கள், […]
போதைப்பொருள் தயாரிப்பு; தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு மரண தண்டனை

பரந்த அளவிலான போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் வழக்கில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி சாரா கலிபா (Sarah Khalifa) உட்பட 12 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான ‘மிஷன் இம்பொசிபிள்’ (Mission Impossible) என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்கு அறியப்பட்ட 39 வயதான இவர், கெய்ரோ நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் சிகரெட் […]
கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி 37 பேர் பலி

தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியில், கச்சா எண்ணெய் குழாயில் இருந்து வெளியேறிய கடுமையான விஷவாயுவைச் சுவாசித்ததில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டவிரோதமாக எரிபொருளைத் திருட முயன்றபோது இந்த சோக விபத்து நடந்துள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியா நாட்டின் டெல்டா பகுதிகளில் கச்சா எண்ணெய் குழாய்கள் அமைத்துள்ளன. மேலும், தெற்கு நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள ஒக்கிரிகா பகுதியின் ஒகாரி ஜெட்டி அருகே பிரதான கச்சா […]
நேபாள வௌ்ளம் – 2.56 பில்லியன் டொலர் சொத்துகளுக்கு சேதம்

கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளின் முதல் 4 மாதங்களில், வீதிகளை அமைப்பதற்கும், தற்காலிக முகாம்களைக் கட்டுவதற்கும், குடிநீர் வழங்குவதற்கும் மற்றும் மின்சாரத்தை சீரமைப்பதற்கும் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 52.6 மில்லியன் டொலர்களாக இருக்கும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். வெள்ளத்தால் […]
உலக அழகி 2026 இல் கிரீடம் சூடிய டொமினிக்கன் அழகி

2026ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி வியட்நாமில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ‘உலக அழகி 2026’ பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜொஹெய்ரி மொலா வென்றுள்ளார். அவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தெரிவுசெய்யப்பட்ட தாய்லாந்தின் ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார். ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர். தொழில்முறை மொடலான ஜொஹெய்ரி மொலா, இபெரோஅமெரிக்கானா பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவம் […]
உலக வரைபடத்தில் மாற்றம்: 164 நாடுகள் ஆதரவு

ஆபிரிக்கா மற்றும் பிற நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களின் தோற்றத்தை வழக்கமான உலக வரைபடங்கள் தவறாகப் பிரதிபலிப்பதாக வாதிட்டு, ஆபிரிக்க யூனியன் (African Union) சார்பில் டோகோ (Togo) நாடு இந்த முன்னெடுப்புக்குத் தலைமை தாங்கியது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலகின் கண்டங்களை மிகவும் துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UN General Assembly) ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மாற்றம் உலக வரைபடங்கள் காண்பிக்கப்படும் முறையையே மாற்றக்கூடும். செப்டம்பர் 4ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட […]
விலை உயர்வுக்கு எதிராக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை: தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களைப் பெரும் சுமைக்குள்ளாக்கி வருவதால், அதைக் கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடகச் செய்திக் குறிப்பின் முக்கிய விவரங்கள்: விலைவாசி உயர்வு: தமிழ்நாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், எண்ணெய், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்டவற்றின் விலை 20% முதல் 35% […]
செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவது குறித்துக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் முக்கிய விவரங்கள்: வழக்கின் பின்னணி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கந்தசாமி […]
நாட்டிலுள்ள சமூக நோய்க்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

சென்னை: மனிதர்களின் உடல் நோய்க்கு மருத்துவம் பார்ப்பது போல, நாட்டில் நிலவிவரும் சமூக நோய்க்கும் மருத்துவர்கள் தங்களின் சிகிச்சையை அளிக்க வேண்டும் எனத் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்திப் பிரிவுத் தலைவரும் எழுத்தாளருமான திருமாவேலன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: சுயமரியாதை மற்றும் திருக்குறள் நெறி: திருமாவேலன் – ரேணுகா தம்பதியரின் மகள் டாக்டர் அமிர்தாவுக்கும், […]