நான்கு விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (08) கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொடவில மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. கெப்பெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – பதுளை வீதியின் அளகொலகால பகுதியில், நுவரெலியா திசையை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் […]
நல்லூர்க் கந்தசாமி – தேர்த் திருவிழா!

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நல்லூர்கந்தசாமி கோவில் தேர்த் திருவிழா இன்று காலை லட்சோப லட்சம் அடியவர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் புதுடெல்லி தனது முழு பலத்துடனும் இலங்கையின் பக்கம் நிற்கும்-ராஜ்நாத் சிங்

இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் புதுடெல்லி தனது முழு பலத்துடனும் இலங்கையின் பக்கம் நிற்கும் என உறுதியளித்த வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நாகரிகத் தொடர்புகளை வலியுறுத்தினார். இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய சிங், இலங்கையை இந்தியாவின் “மிக நெருங்கிய நண்பன்” என விவரித்ததுடன், அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணுவதன் […]
முதல்வர் விஜய் மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தது திமுக!

சென்னை: முதலமைச்சர் விஜய் மீது திமுக துணை கொறடா கோ.வி. செழியன் தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேரில் சென்று அவை உரிமை மீறல் புகாரை அளித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை குறித்த முக்கிய விவரங்கள்: உரிமை மீறல் புகார் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது அறையில் நேரில் சந்தித்த திமுக துணை கொறடா கோ.வி. செழியன் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் விஜய் அவையில் செயல்பட்டதாகக் […]
அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது. அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு […]
கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நேற்று (08) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர் அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர். நீண்டகால […]
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இதன்போது, அவர்களிடமிருந்து 1,700 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில், சமந்த (24220), திசாநாயக்க […]
38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு […]
நாட்டின் ஜனநாயகத்தை அதிவேகமாக அரசாங்கம் அழித்து வருகிறது!

அரசாங்கம் அதிவேகப்பாதைகளை அமைப்பதுபோல், நாட்டின் ஜனநாயகத்தையும் அதிவேகமாக அழித்து வருகிறது. பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதி அமைச்சரையும் நீதி அமைச்சின் செயலாளரையும் சந்திப்பதற்கு அனுமதி கோரியும் அதற்கு அனுமதி வழங்கப்படாததன் மூலம் நாட்டின் ஆட்சிமுறை ,ஜனநாயகம் குறித்து பாரதூரமான சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்து விடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கட்டளைகள் மீீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு […]
Business Global International award அமைப்பின் ‘Excellence Award’ நிகழ்வு!

Business Global International award அமைப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் நடாத்தவிருக்கின்றது. எமது சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற பலர் இருக்கின்றார்கள். தொழில் முனைவோர், சமூக சேவையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுடைய திறமை, உழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டி, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஒரு கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே Excellence […]